எனும் இடத்திலிருந்து தமிழ்த்தோட்டத்திற்கு வந்திருக்கும் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
தமிழ் பயிர்தனை இனிதே பார்த்து நல்ல உரமிட்டு செல்லுங்கள்.


தமிழ் இணைய மாநாடு




Tamil Internet Conference 2009
"கணிவழி காண்போம் தமிழ்"
அக்டோபர் 23-25, 2009

Institute of Indology and Tamil Studies (IITS)
of the UNIV. OF COLOGNE GERMANY

மேலும் விவரம் அறிய.... http://www.infitt.org/ti2009/

தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் இயற்கை எய்தினார்.


புதுவைத் தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் 03.06.2009 விடியற்காலை 1 மணிக்குப் புதுச்சேரியில் உள்ள தம் இல்லத்தில் இயற்கை எய்தினார்.



திருமுருகனார் வாழ்க்கைக்குறிப்பு அறிய இங்கே சொடுக்குக.

யாதும் ஊரே இதழின் ஆசிரியர் காலமானார்.

"யாதும் ஊரே" இதழின் ஆசிரியரும்,பெரியார் பெருந் தொண்டரும்,தமிழறிஞருமான நா.வை.சொக்கலிங்கம்,(நா.வை. இங்கர்சால்) அவர்கள் இன்று(02/06/09) காலமானார்.
அவர்களின் நினைவாக ...













பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்

புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

என்று முழங்கிய பாவேந்தர் பாரதிதாசனின் நினைவு நாள் இன்று(21-04-09).

பாவேந்தரைப்பற்றி அறிஞர்களின் கருத்துகள்:

தந்தை பெரியார் 1938
சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற கவி

"பாரதிதாசன் கவிதைகள்" என்னும் புத்தகம் தமிழ் நாட்டுக்கு ஒரு சிறந்த பொக்கிஷமாகும். இது, படிப்போருக்குக் கவியா? வசனமா? என்று மலைக்கும் படியான ஓர் அற்புதக் கவித்திரட்டு என்றுதான் சொல்ல வேண்டும்.

கவிதைகள் அமைப்புப் பெருமை இங்ஙனம் இருக்க, கவிகள் கொண்ட கருத்துக்களோ முற்றிலும் சமூக சமயச் சீர்திருத்தக் கருத்துக்களேயாகும். சிறப்பாக மூட நம்பிக்கைகளை அகற்றும் தன்மையில், மிகமிகப் பாமர மக்களுக்கும் பசுமரத்தில் ஆணி அறைந்தது போல் விளங்கும்படியும் பதியும்படியும் பாடப்பட்டிருப்பதுடன், கவி நயமோ புலவர்களுக்கு ஒரு நல் விருந்தாகவும் அமைந்துள்ள அரும் புத்தகமாகும்.

தோழர் பாரதிதாசன் அவர்கள் தமிழ்நாட்டிற்குப் புதியவரல்ல. அவர் சென்ற பத்து ஆண்டுகளாகச் சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாய் ஈடுபட்டு வருகின்றார். மனித சமுதாயத்தின் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் சந்தோஷ வாழ்க்கைக்கும் இன்றியமையாத புரட்சியான பல சீ¡திருத்தங்களை ஆதரிப்பது மட்டுமின்றி, அவைகளை ஜன சமூகத்தில் பலவழிகளிலும் பரப்ப வேண்டுமென்ற ஆசையைக் கொண்டவர். சிறப்பாகவும், சுருக்கமாகவும் கூற வேண்டுமானால் பாரதிதாசன் அவர்கள் "சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற கவி" என்றுதான் வற வேண்டும்.

இந்த ஒரு காரணத்தினாலேயே, அவர் இன்று தமிழ் நாட்டின் சிறந்த கவியாய் இருந்தும், அவருடைய புகழ் போதுமான வரையில் பரவாமலிருக்கிறது. ஆனால் அவர் மட்டும் வெறும் புகழை விரும்புவாரானால், காலத்திற்கும் பாமர மக்கள் உணர்ச்சிக்கும் ஏற்றவாறு தம் கருத்துக்களை மாற்றிக் கொண்டு மிகச் சிறந்த கவி என்ற பெயரை எளிதில் பெற்று விடலாம்.

ஆனால், உண்மை, நியாயம், அறிவு முதலியவற்றைச் சிறிதும் விட்டுக் கொடுக்க இசையாத இயற்கையான ஒரு பிடிவாதமுடையவராதலால் அவர் புகழை எதிர்பாராமல், தம் கொள்கைகளில் விடாப்பிடியாய் இருந்து வருகிறார். இக்குணத்தை நான் அவரிடம் பல தடவைகளில் கண்டிருக்கிறேன்.

இத்தகைய ஒருவரால் எழுதப்பட்ட இப்புத்தகத்தை உண்மைத் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் சிறப்பாகச் சமூகப் புரட்சிக் கருத்துடையவர்களும், சமூகச் சீர்திருத்தத் தொண்டு செய்பவர்களும் வாங்கி அனுபவித்து அதன் கருத்துக்களை மக்களிடையில் பரப்ப வேண்டியது மிக்க அவசியமாகும்.

இப்பாட்டுக்களைப் பாடிய தோழர் பாரதிதாசன் அவர்களுக்கும் இவைகளைத் திரட்டி வெளியாக்கிய தோழர் குஞ்சிதம் குருசாமி அவர்களுக்கும் சீர்திருத்த உலகம் கடப்பாடுடையதாகும்.

பேரறிஞர் அண்ணா
வீரராகத் திகழ.....தழிழராக வாழ....!

"முகிலைக் கிழித்து வெளிக் கிளம்பும் ஒரு முழுமதி போல".... தமிழ்நாட்டில் தோழர் பாரதிதாசனின் கவிதை தேன்றியுள்ளது. புரட்சிக் கருத்துகள் அவரது உள்ளத்தில் பொங்கிப் பூரித்து, புதுமைக் கவிதைகளாக வெளிவருகின்றன. இயற்கையின் எழில், காதல், மேம்பாடு, கலை நுணுக்கம் முதலியனபற்றி அவர் இயற்றியுள்ள கவிதைகள் படிப்போரைக் களிப்புக் கடலில் ஆழ்த்தும். ஆனால், புத்துலகக்கரை கொண்டு போய்ச் சேர்க்கும். வீரச் சமுதாயம், "கடவுள்", "மதம்", என்னும் கட்டறுத்து காதல், கவிதை, கலை எனும் நறுமணச் சோலையில் உலவும் நல்ல சமுதாயம், "ஓடப்பர்" இல்லது "ஒப்பப்பர்" உள்ள சமுதாயம், வஞ்சகத்தை வீழ்த்த வாளெடுக்கத் துணியும் தீரச் சமூகம் - இது கவியின் இலட்சியம். இது பலப்பல பரிமளத்துடன் பாக்களாக வந்துள்ளன. ஒவ்வொன்றும் உள்ளத்துக்கு உல்லாசமும், உறுதியும் தருவன. முத்தும், பவளமும், வைரமும் தங்கப் பேழையில் இட்டுத் தருவதுபோல் பாரதிதாசனின் கவிதைகளைத் திரட்டி அழகிய வடியினதாக, சென்னை "தமிழ் நூல் நிலையத்தார்" வெளியிட்டுள்ளனர். இளைஞர்கள் ஒவ்வொருவரும் இதனைப் பெற வேண்டும். பேறு பெற அல்ல. புத்துலகக் கருத்து பெற, புதுமைச் சுவையை உண்ண, வீரராகத் திகழ! தமிழராக வாழ!

மறைமலையடிகள்
பாச்சுவை பாரதிதாசன் வாழ்க

திருச்சியில் ஒரு மணி விழா நடைபெற்று வருகிறது. அது தமிழ் விழா. தமிழ்நாட்டு விழா. தமிழ்ப் பாட்டு விழா. அவ்விழாவை, இயல் வாழ்த்துகிறது; இசை வாழ்த்துகிறது; நாடகம் வாழ்த்துகிறது.

மணி விழாவுடையார் யார்? புதுவைத் தோன்றல் சுப்புரத்தினம் - பாரதிதாசன்; அவர் வாழ்க!

கடவுள் பாட்டு, கருணை பாட்டு, நிலை பாட்டு, வெண் வீதி பாட்டு, ஞாயிறு பாட்டு, திங்கள் பாட்டு, நானிலம் பாட்டு, எல்லாம் பாட்டு - பாட்டே!

எல்லாவற்றையும் பாட்டாக நோக்கும் நெஞ்சில் பாட்டு முகிழ்க்கும். அதனை எழுத்தோவியமாக அமைக்கும் பேறு பலர்க்கு வாய்ப்பதில்லை. தோழர் பாரதிதாசனுக்கு அப்பேறு எளிதில் வாய்த்தது. இது கருவிலுற்ற திருவேயாகும்.

தோழருடன் சிறிது நேரம் பேசினும் அவர்தம் குழந்தை மனம் புலனாகும். குழந்தை மனம் பாட்டுப் புலம் என்பதை விளக்க வேண்டுவதில்லை.

புதுவைத் தமிழ் வகுப்பு கனகசுப்புவினிடத்திருந்து பொங்கி வழிந்த பாமணிகள் பலப்பல. அவற்றுள், கருத்து வேற்றுமை உண்டு. வேற்றுமை என் நெஞ்சைக் கவர்வதில்லை. பாட்டே என் நெஞ்சசைக் கவரும். இது சுப்புவின் பாட்டுத் திறம் என்று கூறாது வேறென்ன கூறுவது.

பொதுவைப் பொழில் - புதுமை மலர் - தமிழ்த்தேன் - பாச்சுவை - பாரதிதாசன் வாழ்க! வாழ்க! வாழ்க பல்லாண்டு!
தமிழ்த்தென்றல் திரு வி.க.

".....இக்காலத்திற் பல துறைகளிலுஞ் சீர்திருத்தம் வேண்டி நிற்கும், நம் தமிழ் மக்கட்குப் புது முறையிற் பாடப்பட்டிருக்கும் பாரதிதாசனின் பாட்டுகள் கிளர்ச்சியினையும் மகிழ்ச்சியினையும் பயந்து, சீர்திருத்தங்கள் பலவற்றிற்கு வழி காட்டும்.

அறிஞர் வ.ரா. 1938
உயிர்க்கவி பாரதிதாசன்

.....பாரதிதாசன் ஆவேசக் கவி. அவர் (அழகு) அலங்காரக் கவி அல்ல. வெறும் ஜோடிப்பு வேலை செய்பவர் அல்ல. அகராதியைக் கொண்டு கவி கட்டும் மேஸ்திரி அல்ல. உண்மைக் கவிதையைக் கண்டு மனம் பொங்கும் "புலவர்" அல்ல. ஆவேசத்தையும் உணர்ச்சியையும் வெள்ளமாகக் கொட்டும் உயரிக்கவி பாரதிதாசன் என்பது எனது தாழ்மையான எண்ணம். அவர் கையாளும் சொற்களின் எழிலையும் பசையையும் விசித்திரத் தன்மையையும் கண்டு அனுபவிப்பவர்கள் நான் சொல்லுவதை ஆதரிப்பார்கள் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும்.

பாரதிதாசன் தமிழ்நாட்டின் பொக்கிஷம். அந்தப் பொக்கிஷத்தைத் தமிழர்கள் அனைவரும் போற்றுவார்களாக! இந்தக் காவியத்தைப் படித்துப் "பேரின்பம்" அடைவார்களாக! அவருடைய கவிதையை வாசித்து உயிரும் உணர்ச்சியும் பெறுவார்களாக.

நாவலர் நெடுஞ்செழியன்
புரட்சிப் பாவேந்தர்

எடுப்பான தோற்றம் - மிடுக்கான நடை - பரந்த முகம் - விரிந்த நெற்றி - அடர்ந்தெழுந்த மீசை - தூக்கிப் பின்னோக்கி வாரி விடப்பட்ட தன்னங்கறுத்த தலைமயிர் - அகன்ற கண்கள் - குறுகுறுத்த பார்வை - முகத்திற்குப் பொலிவூட்டும் மூக்கு - மயிரடர்ந்த புருவம் - மூக்கின் மேல் கண்ணாடி - கறுத்த மேனி - மடித்துக் கட்டபபட்ட வேட்டி - நீண்டு தொங்கும் முழுக்கைச் சட்டை - மார்பிலே, குறுக்கே போர்த்தப்பட்ட பொடி நிறப் போர்வை - காலிலே தொடு தோல் - கையிலே கொண்டிருக்கும் சுருட்டு.

இந்தக் தோற்றப் பொலிவோடு மனக்கண்முன் தோன்றிப் பூரிப்பும் பெருமையும் பெருமிதமும் அளிப்பவர் தாம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் ஆவார்கள்.

எது தமிழ்ப்புத்தாண்டு? சித்திரைப் புத்தாண்டின் அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத புராண வரலாறு

மிழரின் ஆண்டு என்ற பெயரில் இன்று இருப்பது 60 ஆண்டுகளைக் கொண்டு சுழன்றுவரும் ஆண்டு முறைதான. இதற்கு, விக்கிரம ஆண்டு, சாலிவாகன ஆண்டு(சாலிவாகன சகம்), கலியாண்டு என்று பல பெயர்கள் விளங்குகின்றன. தமிழரின் வியாழ ஆண்டு முறையாக 60 ஆண்டு சுழற்சி முறை ஆரியமயமாக மாறிப்போன பிறகு அதற்கு தெய்வீகம் கற்பிக்கப்பட்டது. இறைவனால் உருவாக்கப்பட்டது என நம்பவைக்கப்பட்டது. மதச்சார்பு செய்யப்பட்டுப் புராணங்களில் இணைக்கப்பட்டது. மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த கடவுளர்களின் பெயர்களோடு தொடர்புபடுத்தி மதநூல்களில் ஏற்றப்பட்டது.
அவ்வகையில், புராணக் கதையின்படி ஒரு காலத்தில் நாரத முனிவர் காமம் மேலோங்கி அலைந்தபோது அவருக்கு அறுபதினாயிரம் கோபியரோடு கொஞ்சிக் குலாவும் கிருஷ்ண பகவான் நினைவு வந்ததது. நேராக அவர் முன் போய் "'கிருஷ்ணா, சதா கோபியரோடு கொஞ்சி இன்பம் அனுபவிக்கும் தேவனே, எனக்கு யாராவது ஒரு கோபியைத் தந்து எனது காம இச்சையைத் தீர்த்து வைக்க வேண்டும்''; என வேண்டினார்.

அதற்குக் கிருஷ்ண பரமாத்மா ''நாரதரே, எந்தவொரு பெண்ணின் மனதில் நான் இல்லையோ அந்தப் பெண்ணை நீ அனுபவித்துக்கொள்'' என ஆறுதல் மொழி கூறினார்.

ஆண்டவன் அருள்வாக்கு அருளப்பெற்ற நாரதர் வீடு வீடாய் (நாயாய்) அலைந்தார். அனைத்துப் பெண்கள் மனதிலும் கிருஷ்ணனே நீக்கமறக் குடி கொண்டிருந்தார். ஒரு கோபியும் அதற்கு விதி விலக்கல்ல. ஏக்கமும், ஏமாற்றமும் அடைந்த நாரதர் மானம், வெட்கம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு மீண்;டும் கிருஷ்ண பரமாத்மாவிடமே வந்தார்.

'கிருஷ்ணா! எல்லாக் கோபியர் மனதிலும் தாங்களே இருக்கக் கண்டேன். தேவரீர் என்னை இவ்விதம் சோதிக்கலாமா? காம வேட்கை எனை வாட்டுகிறது. என்னைப் பெண்ணாக மாற்றி நீரே என்னை அனுபவித்து என் வேட்கையைப் போக்க வேண்டும்"' என வேண்டி நின்றார்.

பரிதாபப் பட்ட பகவானும் அவ்விதமே நடப்பதாகக் கூறி, நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார்.

அந்த அறுபது குழந்தைகள் தான் பிரபவ முதல் அட்சய வரையிலான ஆண்டுகள்.


பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோத்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகுதானிய, பிரமாதி, விக்ரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய இவ்விருபதும் உத்தம வருஷங்கள்.

சர்வஜித்த, சர்வதாரி, விரோதி, விகிர்தி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விஸ்வாவசு, பராபவ இவ்விருபதும் மத்திம வருஷங்கள்,

பிலவங்க, கீலக, சவுமிய, சாதாரண, விரோதி கிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, இராக்ஷஸ, நள, பீங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரவுத்ரி, துன்மதி, துந்துபி, உருத்ரோத்காரி, இரத்தாக்ஷி, குரோதன், அக்ஷய இவ்விருபதும் அதம வருடங்களாம்.


அந்தப் பெயர்கள் ஒன்றேனும் தமிழ் அல்ல. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத இவ்வாண்டு முறை வரலாற்றுக்கு உதவாத வகையில் உள்ளது.

இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களை ஆத்திரம் கொள்ளாமல் ஆன்மீகத் தமிழர்கள் ஆர அமர அலசிப் பார்க்க வேண்டும்.

பிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை.
எடுத்துக் காட்டாக மூன்றாவது ஆண்டின் பெயரான ""சுக்கில"" ஆண் விந்தைக் குறிக்கிறது.
இருபத்துமூன்றாவது ஆண்டான விரோதி எதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு குரோதி. இதன் பொருள் பழிவாங்குபவன் என்பதாகும்.
முப்பத்துமூன்றாவது ஆண்டின் பெயர் விகாரி. பொருள் அழகற்றவன்,
ஐம்பத்து ஐந்தாவது ஆண்டான துன்மதி கெட்டபுத்தி என்று பொருள்.

இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க வரலாற்றக் கொண்டுவந்து தமிழனின் தலையில் கட்டிவைத்து இதுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று பறைசாற்றுவதில் உண்மையும் நேர்மையும் இருப்பதாகத் தோன்றவில்லை. வரலாற்றில் மாபெரும் சருக்கல் ஏற்பட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெரிகிறது.

ஆகவே, காலங்காலமாக அறிவாராய்ச்சி இன்றி குருட்டுத்தனமாகத் தமிழர்கள் சித்திரையைப் புத்தாண்டாகக் கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பது புலப்படுகிறது.
இன்று, நிலைமை அவ்வாறு இல்லை. தமிழ்ப் புத்தாண்டு தொடர்பில் பல்வேறு ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று மறைந்துகிடந்த உண்மைகள் வெளிப்பட்டுவிட்டன. இனியும் தமிழ் மக்களை மடையர்கள் என்று எண்ணிக்கொண்டு ஆதிக்க(ஆரிய)க் கூட்டம் ஆட்டம் போடாமல் அடங்கிப் போவதுதான் நல்லது. ஆரிய வழிசார்ந்தவர்கள் தங்களுக்கு எந்த ஆண்டு வேண்டுமோ வைத்துக்கொள்ளட்டும்; எந்த நம்பிக்கை வேண்டுமோ வைத்துக்கொள்ளட்டும்; சமற்கிருத மொழி வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; கிரந்தம் வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; ஆரிய வாழ்க்கை முறையை வைத்துக்கொள்ளட்டும். இவை அனைத்தையும் அவர்களுடன் வைத்துக்கொள்ளட்டும்.

ஆரியக் கூட்டத்தின் மூடத்தனங்களை எந்த நிலையிலும் – எந்தச் சூழலிலும் – எந்த வடிவத்திலும் – எந்த முறையிலும் – எந்த ஊடகத்திலும் உலகின் நனிசிறந்த இனமாகிய தமிழ் இனத்தின்மீது திணிக்க வேண்டாம்! தமிழர்மீது திணிக்க வேண்டாம்! காரணம், அவ்வாறு திணிப்பது ஆதிக்க மனப்பான்மை மட்டுமன்று மனித உரிமை மீறல் என்பதையும் எவரும் மறக்கலாகாது.

மேலும் அறிய... http://thamizhthottam.blogspot.com/2008/12/blog-post_24.html

தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகள் - தொகுப்பு பணி

தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகளைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் முனைவர் தி.நெடுஞ்செழியன் ஏப்ரல் திங்களில் இப்பணியை நிறைவு செய்ய இருக்கிறார்.
இந்நிலையில் சென்னை மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழ் முனைவர் பட்ட ஆய்வுகளின் தரவுகளில் சில குறைபாடுககளுடன் கிடைத்துள்ளன.
அந்தத் தரவுகளின் பட்டியலை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
அறிஞர் பெருமக்கள் தகவல்கள் தெரிந்தால் சான்றுடன்
முனைவர் தி.நெடுஞ்செழியன்,
தமிழ் இணைப் பேராசிரியர்,
ஏவிசி கல்லூரி மன்னம்பந்தல்,
மயிலாடுதுறை
என்னும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்து உதவிட வேண்டுகிறோம். அல்லது tamilthinai@gmail.com மின்னஞ்சல் முகவரியிலும் அனுப்பி வைக்கலாம்.

சென்னை பல்கலைக்கழகம்
http://docs.google.com/Doc?id=ddcp73ts_12gj552hc6
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
http://docs.google.com/Doc?id=ddcp73ts_13ftjvjmf2

தமிழ் இணையப்பயிலரங்கு

தமிழ் இணையப்பயிலரங்குகள் தமிழகம் முழுவதும் பரவலாக நடத்தப்பெற வேண்டும். அப்பொழுதுதான் தமிழில் வலைப்பூக்கள் வழியாகத் தமிழ்சார்ந்த செய்திகள் உலகம் முழுவதும் உள்ளவர்களுக்குப் பயன்படும் வகையில் கிடைக்கும்.தமிழ்ப் பக்கங்களின் எண்ணிக்கை மிகுதியாகும்.அவ்வகையில் தமிழகத்தின் பல இடங்களில் தமிழ் இணையம் சார்ந்த பயிலரங்குகள் நடைபெற்றுள்ளன.அவ்வகையில் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரி அமெரிக்காவில் உள்ள தமிழ்மணம் இணையத்திரட்டியுடன் இணைந்து ஒரு நாள் பயிலரங்கை நடத்துகிறது.

தமிழ் இணையப்பயிலரங்கு

அறிவியல் தமிழ் களஞ்சியம்

அறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன.
ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படையில் காணக் கிடைக்கவில்லை. அதாவது, யூனிகோடு வடிவில் இல்லாமை, நடைமுறை பயன்பாடின்மை என சிக்கல்கள் உள்ளன.

அறிவியல் வளர்ச்சியில் அதன் பயன்பாட்டில் கட்டமைக்கப்பட்டு வரும் சமுதாயம் அறிவியலை உணர வேண்டுமெனில் மொழியை வளப்படுத்த வேண்டும். அறிவியலை உணர பல மாறுபட்ட கருத்துகளை பரிமாற சரியான ஊடகம் அமைக்கப்பட வேண்டும். மொழி என்பது ஊடகமென்பதால் அறிவியல் சிந்தனைகளை வெளிப்படுத்தும் கலைச்சொற்களோடு பல்துறை பதிவுகளோடு வாழ்க்கையை, அறிவியலை, தொழிலை வெளிப்படுத்தும் கருவியாகவும் செம்மைப்படுத்த வேண்டும்.

அதற்கு கணினியும், இணையமும் சிறந்த கருவியாக உள்ளது. மேலும், கணினி சார்ந்த கலைசொற்கள் நிறைய காண உள்ளன. பிற துறை கலைச்சொற்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. இதனை போக்க மிகப்பெரிய திட்டமாக கலைச்சொல் களஞ்சியத்தை உருவாக்கி, பிற இடங்களில் இருக்கும் தரவுகளை ஒருங்கிணைத்து, இணையத்தில் சிறப்பான அறிவியல்தமிழ் கலைச்சொல் அகராதியை உருவாக்க வேண்டும்.

ஆங்கில மொழியறிந்து, பின் ஆங்கில வழி அறிவியலறிந்து அறிவு பெறுவதைவிட கருவறையில் இருந்து தாயின் மடியில் தவழ்ந்ததிலிருந்து இயற்கையாய் படிப்படியாக எவ்வாறு அறிந்துக்கொள்ளல் நிகழ்கிறதோ அவ்வாறு தாய்மொழிவழி அறிவியல் அறிவது முழுமையான பல புதுமைகளைப் படைக்கும் தமிழர்களாய் உருவாக்கிட வழி செய்யும்.
நாளும் வளர்ந்துவரும் அறிவுத்துறைகளுக்கு ஏற்ப சமுதாயம் மாற வேண்டும். அதைப்பற்றிச் சிந்திக்கவும் கருத்து பரிமாற்றம் செய்யவும் மொழி தன்னை வடிவமைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திலுள்ளது
.

தாய்மொழியில் அலாவும் போது புதுமைகளைச் சரளமாகச் சிந்திக்க முடியும். புதிய கண்டுபிடிப்புகள், ஆய்வுகள் என எத்தனையோ சாதனைகளைப் பொருளாதாரத்தில் எளிய மனிதனும் உருவாக்கிட முடியும். அதற்கு தமிழில் அறிவியல் நூல்கள் அதிகம் வெளியாக வேண்டும். தமிழறிஞர்கள், அறிவியலாலர்கள் இணைந்து புதிய கலைச்சொற்களை உருவாக்கிட வேண்டும்.

அறிவியல்தமிழ் நூலாசிரியர்கள், எழுத்தாளர்கள் பெருகிட வேண்டும். ஒவ்வொரு தமிழனும் தான் உயர் நிலைப்பெறும்போது, துறை சார்ந்த நூல்களைத் தமிழில் எழுதி, அடிமட்ட தமிழனையும் சேரும் வண்ணம் வழிவகைச் செய்திட வேண்டும்.

"அறிவியல்தமிழ் கலைச்சொல் களஞ்சியம் " திட்டமானது அனைத்துத்துறை கலைச்சொல்லகராதி மின்னில் தயாரிக்கவும், பிழைத்திருத்தி, மொழிமாற்றி தயாரிக்கவும் முன் தயாரிப்பு பணியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

ஆர்வம் உடையோர் இப்பணியில் பங்கேற்கலாம்.





இணைவோம் தமிழர்களாய்!! இயற்றுவோம் தமிழால் !

எங்கும் தமிழ்!! எதிலும் தமிழ்!! நிலை உருவாக்குவோம்.

அறிவியல் தமிழ் களஞ்சியம்

http://spreadsheets.google.com/viewform?formkey=cG9Ca1FUMFlWejZkNFJuZzJZTmx4T1E6MA..

அறிவியல் தமிழ் கலைச்சொல் களஞ்சியம்

அனைத்துலக தாய்மொழி நாள்.

இன்று பெப்ரவரி 21 , அனைத்துலக தாய்மொழி நாள்.

1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகித்தான் தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை அரச நிருவாக மொழியாக ஆக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக உலகளாவிய மொழி தொடர்பாக நினைவு கூரப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெசுகோ) அமைப்பின் 1999, பெப்ரவரி 21 பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாளை அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவித்தது.

பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்த நாளை யுனெசுகோ அறிவித்தது.

2000 ஆம் ஆண்டு முதல் இந்த நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.




உலகில் உள்ள 6900 மொழிகலில் ஏறக்குறைய 2500 மொழிகள் அடியோடு அழிந்து விடும் ஆபத்து - ஐ நா

அதிகப்படியாக இந்தியாவில் 196 மொழிகள் விரைவில் அழிந்து விடும் என எச்சரிக்கிறது ஐ நா.

அடுத்து அமெரிக்காவில் 192 மொழிகளும், இந்தோனேசியாவில் 147 மொழிகளும் அழியும் ஆபத்து.

ஆத்துரேலியாவின் மொழியியல் வல்லுனர் கிறித்தோபர் மோசுலே தலைமையிலான 25 பேர் கொண்ட வல்லுனர் குழு ஆய்வு தெரிவிக்கிறது.
மேலும், இக்குழு, குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் பெசும் மொழிகளை பாதுக்காக்கவும் பரப்பவும் நடவடிக்கை எடுக்க ப்படாத தால் தான் அவை அழியும் நிலை ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கிறது.

உங்கள் விவரம்